News October 9, 2025
உங்களுக்கு சளி, இருமல் இருக்கா?

பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி போன்றவை ஏற்படும். அவற்றில் இருந்து விடுபட, ◾வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ◾பூண்டுப் பற்களை நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். ◾சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருக வேண்டும். ◾இஞ்சியில் உப்பு சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். ◾கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ◾குறிப்பாக, தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும்.
Similar News
News October 9, 2025
BREAKING: செந்தில்பாலாஜிக்கு புதிய பொறுப்பு

மேற்கு மண்டலத்தில் குறிப்பாக, கோவையில் திமுக வெற்றிக்கு தேவையான அனைத்து அஸ்திரங்களையும் எடுக்க செந்தில்பாலாஜிக்கு தலைமை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கட்சியில் உள்ளடி வேலை பார்ப்பவர்கள், கோஷ்டி சேர்ப்பவர்களை களையெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதோடு, 2026 தேர்தலில் கரூருக்கு பதிலாக கோவையில் ஏதேனும் ஒரு தொகுதியில் செந்தில்பாலாஜியை களமிறங்கவும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
News October 9, 2025
3 நாள்களில் PF பணத்தை எடுப்பது எப்படி?

இதற்கு PF கணக்குடன் பேங்க், ஆதார், PAN ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும் ✦EPFO போர்ட்டலில், லாக்-இன் செய்து, ‘Online Services’ல் ‘Claim’ஐ கிளிக் செய்யவும் ✦வங்கி அக்கவுண்டை ‘Verify’ செய்து, என்ன வகை Withdrawal செய்ய வேண்டுமோ, அதை தேர்வு செய்யுங்கள் (PF Advance, Final Settlement) ✦Withdrawal-க்கான ஃபார்மை நிரப்பிய பின், வங்கி எண் போன்ற தகவல்களை சரிபார்த்து கொடுத்தால் போதும். SHARE IT.
News October 9, 2025
கலைஞர் IN, அம்பேத்கர் OUT? அரசின் அறிவிப்பால் சர்ச்சை

சாதிப் பெயர்களுடன் உள்ள ஊர்களின் பெயர்களை மாற்ற TN அரசு அரசாணை வெளியிட்ட விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. காரணம், தற்போதுள்ள பெயர்களுக்கு மாற்றாக <<17953629>>அரசு பரிந்துரை செய்துள்ள<<>> தலைவர்களின் பட்டியலில் அம்பேத்கர், கொடிகாத்த குமரன், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாமல் ‘கலைஞர்’ பெயர் இடம் பெற்றுள்ளது ஏன் என அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?