News October 9, 2025
பெர்னாட் ஷா பொன்மொழிகள்

▶மனிதர்களுள் இரு வகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை, மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள். ▶நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும். ▶இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. ▶பணம் பசியைத் தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது. ▶பெண்ணை ஒரு பொருள் போல நடத்துவதால் தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
Similar News
News October 9, 2025
BREAKING: விஜய் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அதிகாலை முதலே போலீசார், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, கடந்த 28-ம் தேதியும் விஜய் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
News October 9, 2025
சருமம் பளிச்சிட உதவும் மாதுளை தேநீர்!

சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க, ரத்த சர்க்கரை அளவு குறைய, மழைக்காலத்தில் அதிகரிக்கும் கீழ்வாத பிரச்னைகளுக்கு இந்த மாதுளை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலர்ந்த மாதுளை தோல், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக்கி நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இவற்றை வடிகட்டி, அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்தால், சுவையான மாதுளை தேநீர் ரெடி. SHARE IT.
News October 9, 2025
BREAKING: ஸ்டிரைக்.. தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி நவ.18-ல் ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மேலும், அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், இடைநிலை, முதுகலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இது ஆளும் திமுக அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.