News October 9, 2025

கால்பந்து உலகிலும் காந்தாரா ஃபீவர்

image

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் கவனம் ஈர்த்துள்ளது. பிரிமீயர் லீக் கால்பந்தில் சிறந்த முன்கள வீரர்களில் ஒருவரான எர்லிங் ஹாலண்டினை காந்தாரா போஸ்டர் வடிவில் மாற்றி ‘தி லெஜண்ட்’ என மான்செஸ்டர் சிட்டி அணி பதிவிட்டுள்ளது. போஸ்டருக்கு இந்திய ரசிகர்களால் எக்கச்சக்கமான லைக்ஸ் கிடைக்க, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் இணையத்தில் காந்தாரா படம் குறித்து தேடி வருகின்றனர்.

Similar News

News October 9, 2025

விஜய்யின் உயிர் நண்பன் சஞ்சீவ் சொன்ன தகவல்

image

விஜய்யின் நண்பர் சஞ்சீவ் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அவரிடம் கரூர் விவகாரம் தொடர்பான கேள்விகள் வைக்கப்பட்டது. அப்போது, சம்பவ இடத்தில் இல்லை என்பதால் தனக்கு அதை பற்றி பேச போதுமான அறிவு கிடையாது என அவர் சொன்னார். ஆனால், விஜய்க்கு எந்த பயமும் இல்லை எனவும், சரியான நேரம் வரும்போது களத்துக்கு அவர் செல்வார் எனவும் சஞ்சீவ் பதிலளித்தார்.

News October 9, 2025

சற்றுமுன்: அதிரடியாக கைது செய்தனர்

image

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் <<17944206>>மருந்தால் 21 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் <<>>அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீசார் உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் கோடம்பாக்கத்தில் வைத்து சற்றுமுன் கைது செய்தனர். அவரை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஆலைக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

News October 9, 2025

Fatty liver-ஐ குறைய இந்த ஒரு பழம் போதும்!

image

அதிகப்படியான மது அருந்துவது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது போன்றவற்றால் கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty liver) ஏற்படுகிறது. இதற்கு பப்பாளி மற்றும் அதன் விதைகளை உட்கொள்வது நன்மை பயக்கும். பப்பாளியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது பலனளிக்கும். இதனுடன் அரைத்த பப்பாளி விதைகளை தண்ணீரில் கரைத்து குடிப்பது, கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்க உதவும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!