News April 15, 2024

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல் மக்கள்

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித மலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை குடிநீரில் கலந்தது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Similar News

News January 12, 2026

ஆட்சியில் பங்கு கேட்க உடன்பாடில்லை: வைகோ

image

திமுகவை ஒருபோதும் இந்த பூமியில் இருந்து யாராலும் அகற்ற முடியாது என வைகோ கூறியுள்ளார். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக உடன் கூட்டணி வைத்ததாக கூறிய அவர், இந்த முடிவில் எப்போதும் உறுதியாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை எனவும் பேசியுள்ளார்.

News January 12, 2026

தவெகவில் இருந்து விலகினார்.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

image

தவெகவில் இணைந்த வேகத்தில் பலரும் அடுத்தடுத்து விலகுவது அக்கட்சி தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தவெகவில் இணைந்த கோவையை சேர்ந்த சிலர் நேற்று இரவு, SP வேலுமணி முன்னிலையில் தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், தவெகவில் இருந்து அடுத்தடுத்து வெளியேறுவதற்கான காரணத்தை ஆராய தொடங்கியுள்ளாராம். <<18824216>>நேற்று முன்தினம் அதியமான்<<>> விசிகவில் இணைந்தார்.

News January 12, 2026

IND vs NZ போட்டியில் வெடித்த ஹிந்தி சர்ச்சை

image

நேற்றைய IND vs NZ போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் 13-வது ஓவரை வீசினார். அப்போது, கீப்பர் K.L.ராகுல் ஹிந்தியில் ஆலோசனை கூற, அது சுந்தருக்கு புரியாததால் பின் தமிழில் கூறினார். இதை வர்ணனை செய்த Ex வீரர் வருண் ஆரோன், முதலிலேயே தமிழில் கூறியிருக்கலாம் என கூற, மறுபுறம் இருந்த சஞ்சய் பங்கர், இந்தி தேசிய மொழி என கூறினார். இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

error: Content is protected !!