News October 9, 2025
திமுக ஆட்சியில் தடையின்றி கஞ்சா விற்பனை: EPS

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா தங்கி தடையின்றி கிடைப்பதாகவும், அதற்கு திமுக நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதால் அதன் விற்பனையை போலீசால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 9, 2025
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க இதை பண்ணுங்க

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் <<17943096>>டெங்கு<<>> காய்ச்சலுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அது வராமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம். *நீர் கலன்களை மூடி வைக்கவும். *பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தி வாரம் ஒரு முறை நீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும். *கொசு வலைகளை பயன்படுத்தவும். *வீட்டை சுற்றி தேங்காய் ஓடுகள், டயர்கள் இருந்தால் அகற்றவும். *அதே போல செடிகள், புதர்களை அகற்றவும்.
News October 9, 2025
ஒரு நாள் மட்டும் இப்படி செய்து பாருங்களேன்..

*இன்று ஒருநாள் மட்டும் எந்த காரியத்தையும் தள்ளிப்போடாமல், உடனே செய்யுங்கள் *சண்டையிட்டு, மனஸ்தாபம் ஏற்பட்ட ஒருவரிடம் நார்மலாக பேசுங்கள் *மன அமைதிக்காக கொஞ்ச தூரம் நடைப்பயிற்சி செய்யுங்கள் *ஒருவருக்கு சின்ன உதவியை செய்யுங்கள் *ஒரு பறவைக்கோ/ விலங்கிற்கோ உணவளியுங்கள் *செல்போன் அல்லாமல் நேரில் சென்று நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். மனதில் மகிழ்ச்சி நிறையும். நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News October 9, 2025
BREAKING: நள்ளிரவில் துப்பாக்கி முனையில் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை நள்ளிரவில் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 5 விசைப் படகுகள், மீன்கள், பல லட்சம் மதிப்பிலான வலைகள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் இறங்க தயாராகி வருகின்றனர்.