News October 9, 2025
Cinema Roundup: ‘பைசன்’ படத்திற்கு U/A சான்று

*துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *தெலுங்கில் ‘பைசன்’ படம் அக்.24-ம் தேதி வெளியாகிறது. *துல்கர் சல்மானின் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ₹3 கோடி சம்பளம் பெற்றதாக தகவல். * கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ அக்.23-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல்.
Similar News
News October 9, 2025
கம்பர், கபிலர் பெயர்களை பயன்படுத்த வேண்டும்: TN அரசு

தெருக்கள், சாலைகள் பெயருக்கு பின்னால் உள்ள <<17949340>>சாதிப் பெயர்களை<<>> நீக்க TN அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய 16 பெயர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருவள்ளுவர், ஒளவையார், கபிலர், சீத்தலைச் சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், பாரதியார், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் உள்ளிட்ட 16 பெயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 9, 2025
இஸ்ரேலும், ஹமாஸும் அமைதி திட்டத்திற்கு ஒப்புதல்: டிரம்ப்

அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் கையெழுத்திட்டு இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் காரணமாக பணயக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இஸ்ரேலின் படைகள் பின்வாங்கும் எனவும் SM-ல் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதில் அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள் என்றும், இந்நாள் இஸ்லாமிய நாடுகளுக்கு மிகவும் சிறப்பான நாள் என அவர் கூறியுள்ளார்.
News October 9, 2025
Womens WC: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

மகளிர் உலக கோப்பையில் இன்று இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கெனவே பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தாலும், நியூசிலாந்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கணிக்க முடியாத அணியாக தென்னாப்பிரிக்கா திகழ்வதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.