News October 9, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல்லில் நேற்று (அக்.8) தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி, தொடர்ந்து ரூ. 5.05 ஆகவே நீடிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி இன்று 28.10.2025 வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வரும் 30.10.2025 அன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு உருளை பதிவு, விநியோகம் மற்றும் புகார் தொடர்பான கூட்டம் மாலை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது” என அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.
News October 28, 2025
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற (அக்.31) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், இக்கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
நாமக்கல்: கொட்டிக்கிடைக்கும் வேலைகள்

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


