News October 9, 2025
விஜய்யின் தலைமை பண்பு: HC கருத்தை நீக்க கோரிக்கை

கரூர் துயரம் தொடர்பாக அமைக்கப்பட்ட SIT விசாரணைக்கு தடை கோரி தவெக தரப்பில் SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், 41 பேர் உயிரிழப்புக்கு சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகளே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விஜய்யின் தலைமை பண்பு குறித்த HC-ன் கருத்தை நீக்க கோரியுள்ள தவெக, கூட்ட நெரிசலில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக HC கூறியதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Similar News
News October 9, 2025
அக்டோபர் 9: வரலாற்றில் இன்று

*1897–மறைந்த முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்தநாள். *1924–இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள். *1945-இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான் பிறந்தநாள். *1967-சே குவேரா சுட்டுக் கொலை. *1968– அரசியல்வாதி அன்புமணி பிறந்தநாள்.*1987–நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம், முரசொலி நாளிதழ் கட்டடங்களை இந்திய ராணுவம் தகர்த்தது. *2001–பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியீடு. *2010– நடிகர் எஸ்.எஸ். சந்திரன் மறைந்த நாள்.
News October 9, 2025
விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய வைஷ்ணவி

கரூர் துயரத்தில் மக்களை ஏமாற்றி அனுதாபம் தேடுவதாக, விஜய்யை மறைமுகமாக தவெக முன்னாள் உறுப்பினர் வைஷ்ணவி விமர்சித்துள்ளார். 10 நாள்களாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை என்று அவர் ஏமாற்றி வருவதாகவும் வைஷ்ணவி சாடியுள்ளார். சிறந்த தலைவனாக இருக்க கூட தகுதி இல்லாத போது CM ஆக நினைக்கும் அவரது ஆசை கண்டிப்பாக நிறைவேறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
கருணாநிதியின் பெயர் திணிப்பு: அண்ணாமலை

ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், கருணாநிதியின் பெயரை திணிக்க திமுக அரசு முயற்சிப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். மாற்றுப் பெயர்கள் பட்டியலில் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை புறக்கணித்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராணி வேலு நாச்சியார், கொடிகாத்த குமரன், வ.உ.சி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை புறக்கணித்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.