News October 9, 2025
18 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பொழியும்

தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
Similar News
News October 9, 2025
கருணாநிதியின் பெயர் திணிப்பு: அண்ணாமலை

ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், கருணாநிதியின் பெயரை திணிக்க திமுக அரசு முயற்சிப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். மாற்றுப் பெயர்கள் பட்டியலில் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை புறக்கணித்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராணி வேலு நாச்சியார், கொடிகாத்த குமரன், வ.உ.சி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை புறக்கணித்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
News October 9, 2025
பெர்னாட் ஷா பொன்மொழிகள்

▶மனிதர்களுள் இரு வகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை, மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள். ▶நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும். ▶இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. ▶பணம் பசியைத் தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது. ▶பெண்ணை ஒரு பொருள் போல நடத்துவதால் தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
News October 9, 2025
பாஜக – தவெக இடையே Underground டீலிங்: வன்னியரசு

பாஜக – தவெக Underground டீலிங் போட்டு செயல்படுவதாக வன்னியரசு விமர்சனம் செய்துள்ளார். கரூர் துயரத்தில் RSS, BJP தன்னை ஆதரிக்கும் திமிரில் தான் விஜய் வீடியோ வெளியிட்டு, CM சார் என்னை கைது செய்யுங்க என்று பேசுவதாக அவர் தெரிவித்துள்ளார். தங்களை கொள்கை எதிரி என சொல்லும் விஜய்யை, இதுவரை ஒரு பாஜகவினர் கூட கண்டிக்கவில்லை என்று வன்னியரசு சாடியுள்ளார்.