News October 9, 2025
10th தகுதியிலான தேர்வுக்கு 42 PhD ஆய்வாளர்கள் விண்ணப்பம்

நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு நிலைமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருந்துவிட முடியாது. ம.பி.,யில் 7,500 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். 10th தகுதி மட்டுமே கொண்ட இப்பணிக்கு 42 PhD ஆய்வாளர்கள், ஆயிரக்கணக்கான டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான சம்பளம் ₹19,500 – ₹62,000 என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News October 9, 2025
இஸ்ரேலுக்கு செல்கிறார் டிரம்ப்

அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல்-ஹமாஸ் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில், அவர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த 2016-க்கு பிறகு, அக்.12-ல் இஸ்ரேலுக்கு செல்கிறார் டிரம்ப். உலகமே எதிர்பார்த்த ஒரு விஷயத்தை, தான் முடித்துகாட்டியதாக அவர் பெருமிதம் கொண்டுள்ளார். இந்த சந்திப்பில், பணயக்கைதிகள் விடுவிப்பு குறித்தும், இஸ்ரேலின் படைகள் பின்வாங்குவது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 9, 2025
இருமல் மருந்து விவகாரம்: கிரிமினல் வழக்கு பதிவு

ம.பி.,யில் 21 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான <<17953428>>இருமல் மருந்து<<>> நிறுவனத்தை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். TN அரசு மூலம் அந்த மருந்து கொள்முதல் செய்யப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அந்நிறுவனத்தின் உரிமையை சட்டப்படி ரத்து செய்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
தனுஷ் மாதிரியே நடிக்கிறேனா? பிரதீப் ரங்கநாதன்

தனுஷ் மாதிரியே நடிப்பதாக பிரதீப் ரங்கநாதன் மீது ஒரு விமர்சனம் உள்ளது. ஆனால் இந்த கருத்தை சமீபத்திய பேட்டியில் பிரதீப் மறுத்துள்ளார். இருவருக்கும் ஒரேமாதிரியான உடல் அமைப்பு உள்ளதால் அதுபோன்று தோன்றலாம் என அவர் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ் சாயலில் நடிப்பதாக தனக்கு தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கோமாளியில் இயக்குநராகவும் லவ்டுடே, டிராகன் படங்களில் நடிகராகவும் பிரதீப் அசத்தியிருப்பார்.