News April 15, 2024
ஆவடி அருகே துப்பாக்கி முனையில் கொள்ளை

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான அடகு கடையில் இன்று மதியம் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் பிரகாஷை கட்டி போட்டு விட்டு, சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறப்பு

திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் 5 ஏக்கரில் இந்த திட்டம் 2023 ஜூலை தொடங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயக்கத்துக்கு, வசதியாக அடிப்படை கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.
News July 5, 2025
திருவள்ளூரில் திறக்கப்பட்டது ஆம்ஸ்ட்ராங் சிலை

திருவள்ளூரில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் சிலை இன்று (ஜூன் 5) திறக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில், கோரிக்கை மனு சமர்பித்து, அனுமதி வழங்கியதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் சிலையை திறந்துவைத்தார் தலைமை நீதிபதியின் தாயார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5,2024, சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News July 5, 2025
பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை அனுப்பிவைப்பு

மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு ஆவடி வரையிலான வழித்தடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பயணிகளின் கோரிக்கை ஏற்று திட்டத்தை பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரையில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தை ஆய்வு செய்த தமிழக அரசு ரூ9,928.33 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொள்ளப்படும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது