News October 8, 2025
குழந்தைகள் சுவரில் கிறுக்குறாங்களா? TRY THIS

குழந்தைகள் இருக்கும் வீட்டில் கிறுக்கல் இல்லாத சுவர்களை பார்ப்பது அரிது. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இது பெரும் தலைவலியாக இருக்கும். பெயிண்ட் அடிக்க செலவு செய்யாமல், வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே இதை நீங்கள் நீக்கலாம். பேக்கிங் சோடா, தண்ணீரை கலந்து பேஸ்ட்டாக்கி அதை சுவரில் உள்ள கறைகளில் தடவினால் அவை நீங்கும். பேக்கிங் சோடா இல்லையெனில் வினிகரை பயன்படுத்தலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 483 ▶குறள்: அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். ▶பொருள்: செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.
News October 9, 2025
மத்திய அரசு நிறுவனத்தில் 646 காலிபணியிடங்கள்

மத்திய அரசின் CDAC நிறுவனத்தில் காலியாக உள்ள 646 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புராஜக்ட் இன்ஜினியர், புராஜக்ட் சப்போர்ட், புராஜக்ட் மேனேஜர் ஆகிய பணியிடங்களுக்கு careers.cdac.in என்ற தளத்தில் வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். கல்வித்தகுதி : BE/ BTech/ MCA முடித்திருக்க வேண்டும். பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
News October 9, 2025
திமுக ஆட்சியில் தடையின்றி கஞ்சா விற்பனை: EPS

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா தங்கி தடையின்றி கிடைப்பதாகவும், அதற்கு திமுக நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதால் அதன் விற்பனையை போலீசால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.