News October 8, 2025

கலிஃபோர்னியாவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை

image

USA-வின் கலிஃபோர்னியா மாகாணம், தீபாவளியை அதிகாரப்பூர்வ அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இதன்மூலம், அன்றைய நாளில் விருப்பத்தின் பேரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை எடுக்கலாம். அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். பென்சில்வேனியா, கனெக்டிகட் ஆகிய மாகாணங்களை தொடர்ந்து தீபாவளியை அரசு விடுமுறை நாளாக அறிவித்த 3-வது USA மாகாணமாக கலிஃபோர்னியா மாறியுள்ளது.

Similar News

News October 9, 2025

அடிக்கடி திருமண கனவுகள் வருகிறதா?

image

➤சிங்கிள்ஸ்க்கு திருமண கனவு வந்தால், புதிய பயணம் தொடங்குமாம். ➤காதலி (அ) தோழியை மணம் செய்வதாக வந்தால், அவர்களுடன் உறவு வலுப்படும். ➤திருமணத்திற்கு பின் வேறொருவரை மணம் செய்வதாக வந்தால், அவரை அதிகம் நேசிக்கிறீர் என அர்த்தம். எனினும், அவரை விட்டு விலகுவது நல்லது. ➤நீங்களோ, மற்றவரோ திருமணத்திற்கு தயாராவதாக கனவு வந்தால், வருத்தம் (அ) பதட்டத்தை குறிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

News October 9, 2025

கால்பந்து உலகிலும் காந்தாரா ஃபீவர்

image

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் கவனம் ஈர்த்துள்ளது. பிரிமீயர் லீக் கால்பந்தில் சிறந்த முன்கள வீரர்களில் ஒருவரான எர்லிங் ஹாலண்டினை காந்தாரா போஸ்டர் வடிவில் மாற்றி ‘தி லெஜண்ட்’ என மான்செஸ்டர் சிட்டி அணி பதிவிட்டுள்ளது. போஸ்டருக்கு இந்திய ரசிகர்களால் எக்கச்சக்கமான லைக்ஸ் கிடைக்க, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் இணையத்தில் காந்தாரா படம் குறித்து தேடி வருகின்றனர்.

News October 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 483 ▶குறள்: அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். ▶பொருள்: செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

error: Content is protected !!