News October 8, 2025
படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்

மகளிர் ODI WC தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. ஆஸி., நிர்ணயித்த 222 ரன் இலக்கை துரத்திய பாக்., அணியால் ஆஸியின் பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை. சிட்ரா ஆமின் மட்டுமே 35 ரன் எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ 114 ரன்களுக்கு பாக்., சுருண்டது. ஆடிய 3 ஆட்டங்களில் தோற்றதால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் பாக்., உள்ளது.
Similar News
News October 9, 2025
அடிக்கடி திருமண கனவுகள் வருகிறதா?

➤சிங்கிள்ஸ்க்கு திருமண கனவு வந்தால், புதிய பயணம் தொடங்குமாம். ➤காதலி (அ) தோழியை மணம் செய்வதாக வந்தால், அவர்களுடன் உறவு வலுப்படும். ➤திருமணத்திற்கு பின் வேறொருவரை மணம் செய்வதாக வந்தால், அவரை அதிகம் நேசிக்கிறீர் என அர்த்தம். எனினும், அவரை விட்டு விலகுவது நல்லது. ➤நீங்களோ, மற்றவரோ திருமணத்திற்கு தயாராவதாக கனவு வந்தால், வருத்தம் (அ) பதட்டத்தை குறிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
News October 9, 2025
கால்பந்து உலகிலும் காந்தாரா ஃபீவர்

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் கவனம் ஈர்த்துள்ளது. பிரிமீயர் லீக் கால்பந்தில் சிறந்த முன்கள வீரர்களில் ஒருவரான எர்லிங் ஹாலண்டினை காந்தாரா போஸ்டர் வடிவில் மாற்றி ‘தி லெஜண்ட்’ என மான்செஸ்டர் சிட்டி அணி பதிவிட்டுள்ளது. போஸ்டருக்கு இந்திய ரசிகர்களால் எக்கச்சக்கமான லைக்ஸ் கிடைக்க, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் இணையத்தில் காந்தாரா படம் குறித்து தேடி வருகின்றனர்.
News October 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 483 ▶குறள்: அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். ▶பொருள்: செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.