News October 8, 2025

BREAKING: கரூர் செல்கிறார் விஜய்

image

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க பாதுகாப்பு கேட்டு விஜய் மனு அளித்திருந்த நிலையில், கரூர் மாவட்ட SP-யை அணுக DGP அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இது ஒருவகையில் அவருக்கு கிடைத்த கிரீன் சிக்னல் என தவெகவினர் கூறுகின்றனர். இதனால், SP-யிடம் நேரம், இடம் குறித்த தகவலை கொடுத்து அனுமதி பெற்று ஓரிரு நாள்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News October 9, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 9, புரட்டாசி 23 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 01:00 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை

News October 9, 2025

Cinema Roundup: ‘பைசன்’ படத்திற்கு U/A சான்று

image

*துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *தெலுங்கில் ‘பைசன்’ படம் அக்.24-ம் தேதி வெளியாகிறது. *துல்கர் சல்மானின் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ₹3 கோடி சம்பளம் பெற்றதாக தகவல். * கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ அக்.23-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல்.

News October 9, 2025

20 குழந்தைகள் மரணம்: எச்சரித்த மத்திய அரசு

image

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடைசி 24 மணிநேரத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில், அனைத்து மாநிலங்கள், யூ.பிரதேசங்களுக்கு மத்திய பொது சுகாதார துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்து மூலப் பொருள்களையும், தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!