News October 8, 2025
CJI மீது காலணி வீச்சு: கிரிமினல் வழக்கு தொடர கோரிக்கை

SC CJI பிஆர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது, கிரிமினல் வழக்கு தொடர சம்மதம் கோரி, அட்டர்னி ஜெனரலுக்கு மூத்த வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். கிஷோரின் செயல் உச்சநீதிமன்றத்தின் மாண்பை குலைப்பதுடன், அரசியலமைப்பையும் அவமதிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பவத்துக்கு பின்பும் அவரது நடத்தை மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 9, 2025
BREAKING: விஜய் கட்சியுடன் கூட்டணி.. பிள்ளையார் சுழி

தவெகவுடன் கூட்டணிக்கு <<17952830>>பிள்ளையார் சுழி<<>> போடப்பட்டுவிட்டதாக EPS பேசியது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய்யுடன் EPS, செல்போனில் 30 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது, திமுகவை எதிர்க்க கூட்டணியில் சேர விஜய்க்கு, EPS அழைப்பு விடுத்ததாகவும், பொங்கலுக்கு பிறகு தனது முடிவை கூறுவதாக விஜய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் பிள்ளையார் சுழி என EPS கூறியுள்ளார்.
News October 9, 2025
₹12,352 கோடி சொத்துகளுடன் பில்லியனரான ரொனால்டோ

பில்லியனர் அந்தஸ்தை எட்டிய முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையைப் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, அவரது மொத்தச் சொத்து மதிப்பு சுமார் ₹12,352 கோடியாக உள்ளது. 2002 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான போட்டிகளில் விளையாடியதன் மூலம் சுமார் ₹4,869.57 கோடி சம்பாதித்துள்ளார். மேலும் விளம்பரம், கிளப் ஒப்பந்தம் மூலம் ₹7,038 கோடி வருமானமாக ஈட்டியுள்ளார்.
News October 9, 2025
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க இதை பண்ணுங்க

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் <<17943096>>டெங்கு<<>> காய்ச்சலுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அது வராமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம். *நீர் கலன்களை மூடி வைக்கவும். *பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தி வாரம் ஒரு முறை நீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும். *கொசு வலைகளை பயன்படுத்தவும். *வீட்டை சுற்றி தேங்காய் ஓடுகள், டயர்கள் இருந்தால் அகற்றவும். *அதே போல செடிகள், புதர்களை அகற்றவும்.