News April 15, 2024

தமிழில் உரையைத் தொடங்கிய மோடி

image

‘என் இனிய சகோதர, சகோதரிகளே வணக்கம்’ என தமிழில் உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. நெல்லையில் தேர்தல் கூட்டத்தில் பேசிவரும் அவர், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். பாஜக தேர்தல் அறிக்கையில் மீனவர்கள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜகவிற்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து INDIA கூட்டணிக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என விமர்சித்துள்ளார்.

Similar News

News December 26, 2025

விஜய்க்கு இதை சொல்ல தைரியம் இருக்கா? முத்தரசன்

image

சாதி, மத அரசியலை செய்யும் பாஜக தான் தீய சக்தி என முத்தரசன் தெரிவித்துள்ளார். TN-ல் மத நல்லிணக்கத்தை சீரழிக்கும் பாஜகவை தீய சக்தி என சொல்லும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா என கேட்ட அவர், அப்படி அவர் பேசாமலிருப்பது மத அரசியலுக்கு ஆதரவளிக்கிறார் என்றுதானே பொருள் எனவும் விமர்சித்துள்ளார். கொள்கையின்றி வெறுமனே வெறுப்பு அரசியலைப் பேசுவதால் எந்தவொரு நன்மையும் விஜய்க்கு கிடைக்காது எனவும் கூறியுள்ளார்.

News December 26, 2025

வண்ணமயமான மார்கழி கோலங்கள்!

image

பாக்டீரியாவை அழிக்கும் சக்தி சாணத்திற்கு உண்டு என்பதாலேயே, அதை பிள்ளையாராக பிடித்து கோலத்தின் நடுவே வைக்கும் வழக்கத்தை முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர். அத்துடன் சாணத்தை கரைத்து வீட்டை சுற்றியும் தெளித்துள்ளனர். அந்த வகையில், மார்கழியில் வீட்டுவாசலில் போடக்கூடிய சில வண்ணமயமான கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். தவறாமல் வீட்டுவாசலில் முயற்சிக்கவும்.

News December 26, 2025

பொங்கல் பரிசுத் தொகை.. போட்டு உடைத்தார்

image

பொங்கல் பரிசுத் தொகையால் ஓட்டு மதிப்பு நாளுக்கு நாள் கூடுவதாக சீமான் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் தான் ஓட்டு போடவே வருவதாகவும், 2021-ல் EPS ₹2,500 கொடுத்தார். தற்போது திமுக அரசு ₹3,000 கொடுக்க உள்ளதாக தெரிகிறது என சஸ்பென்ஸை போட்டு உடைத்துள்ளார். பொங்கல் பரிசு அறிவிப்புக்காக தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சீமானின் இந்த பேச்சு குறித்து உங்க கருத்து என்ன?

error: Content is protected !!