News October 8, 2025
பொய் சொல்வதில் ஸ்டாலின் முதலிடம்: EPS

கரூர் துயரத்தை மேற்கோள்காட்டி, நெடுஞ்சாலைகளில் பரப்புரை மேற்கொள்ள அதிமுக, பாமகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை திருச்செங்கோடு பரப்புரையில் சுட்டிக்காட்டிய EPS, 2 முறை மறுக்கப்பட்ட பிறகு தற்போது பேச வந்துள்ளேன் என்றார். பொய் கூறுவதில்தான் ஸ்டாலின் முதலிடம் என விமர்சித்த EPS, அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், தன்னை சூப்பர் CM என ஸ்டாலின் கூறிக்கொள்வதாக சாடினார்.
Similar News
News October 9, 2025
20 குழந்தைகள் மரணம்: எச்சரித்த மத்திய அரசு

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடைசி 24 மணிநேரத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில், அனைத்து மாநிலங்கள், யூ.பிரதேசங்களுக்கு மத்திய பொது சுகாதார துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்து மூலப் பொருள்களையும், தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
News October 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 9, 2025
இந்த வார ஓடிடி ரிலீஸ்

*’மிராய்’ படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்.10-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. *அருள்நிதியின் ‘ராம்போ’ நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது. *ஜூனியர் என்.டி.ஆரின் ‘வார் 2’ படத்தை இன்று முதல் நெட்பிளிக்ஸில் பார்த்து மகிழலாம். *அர்ஜுன் தாஸின் ‘பாம்’ ஆஹா ஓடிடி தளத்தில் வரும் 10-ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகும். *ஜான்வி கபூரின் ‘பரம் சுந்தரி’ நாளை முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் ஆக வாய்ப்பு.