News October 8, 2025

கரூர் துயரம்.. கண்ணீர் சிந்திய விஜய்

image

கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். குறிப்பாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை துருவ் விக்னேஷின் அத்தையுடன் பேசியபோது, குழந்தை புகைப்படத்தை பார்த்துக் கண்ணீர் சிந்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தையின் தாயார் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த அவர், மேலும் வேதனையடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Similar News

News October 9, 2025

இந்தியாவின் வியட்நாம் ‘தமிழகம்’

image

தமிழகம், இந்தியாவின் வியட்நாமாக உள்ளது என சர்வதேச பொருளாதார கொள்கைக்கான கொரிய நிறுவன தலைவர் (இந்தியா – தெற்காசிய) கியூங்குன் கிம் தெரிவித்துள்ளார். தமிழகம், வியட்நாமின் உற்பத்தி துறையின் பங்களிப்பு என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் இரண்டுமே வேகமாக வளர்ந்து வரும் தொழில் கேந்திரங்கள் என்றும் கூறியுள்ளார்.

News October 9, 2025

அழகு பதுமை அபர்ணா தாஸ்

image

தமிழ் மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ், ‘பீஸ்ட்’ திரைப்படம் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானார். இதையடுத்து, ‘டாடா’ திரைப்படம் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார். வளர்ந்து வரும் நடிகையான அபர்ணா, அவ்வப்போது, இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில், இவர் பதிவிட்ட போட்டோஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News October 9, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. இபிஎஸ் அதிரடி

image

அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக EPS மறைமுகமாக கூறியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என EPS பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, ‘கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே!’ என உணர்ச்சி பொங்க பேசினார். இது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!