News October 8, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் மாற்றம்

ஊர், தெரு, சாலைகளின் பெயர்களுக்கு பின்னால் உள்ள <<17949340>>சாதிப் பெயர்களை நீக்க<<>> TN அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆதார், ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பெயர் மாற்றத்தை உள்ளாட்சி, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்த பிறகு, TNeGA, ELCOT மூலம் ஆதார், ரேஷன் கார்டுகளில் முகவரி திருத்தங்கள் செய்ய மக்களுக்கான முகாம்கள் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. SHARE IT.
Similar News
News October 8, 2025
அரசன் படத்தில் வில்லன் இவரா?

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். கதாநாயகியாக சமந்தா (அ) சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், வில்லன் ரோலில் உபேந்திரா, கிச்சா சுதீப் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, அனிருத்தும் புதிதாக வெற்றிமாறனின் பட்டறையில் இணைவதாக கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
News October 8, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா?

தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்க TN அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.20 திங்களன்று தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து 3 நாள்கள் ஏற்கெனவே விடுமுறையாகும். தற்போது, அக்.21 அன்று விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே அக்.23 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாம். SHARE IT.
News October 8, 2025
குழந்தைகளுக்கான சிறந்த உணவுகள்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல், மனநிலை ஆகியவற்றை சில உணவுகளின் மூலம் அதிகரிக்க முடியும். சிறிய தேர்வுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் உணவுகள் என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.