News April 15, 2024

ஈரோடு: மக்களே கொண்டாட தயாரா இருங்க

image

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.15) தொடங்கியது.
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (ஏப். ,15) காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கமேஸ்வரர் சன்னதியில் உள்ள கொடிக்கம்பத்தில் நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

Similar News

News November 10, 2025

சித்தோடு குழந்தை கடத்தல்! திணறும் போலீஸ்

image

சித்தோடு அருகே நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பகுதியில், ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பியின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடந்த மாதம், 15-ம் தேதி நள்ளிரவு கடத்தப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைத்தும் இதுவரை விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தை கடத்தப்பட்டு, 25 நாட்களாகியும் சிறு தடயம் கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

News November 10, 2025

திண்டல்: முதியவர் தூக்குமாட்டி தற்கொலை

image

ஈரோடு திண்டல் காரப்பாறையை சேர்ந்தவர் ராமசாமி (64). இவர் கார் பட்டறையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து ராமசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இவர் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையானவர்.

News November 10, 2025

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி!

image

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கரண் சந்த் என்பவர், தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் சென்று விட்டு, மீண்டும் கோவை திரும்பியுள்ளார் அப்போது, விண்ணப்பள்ளி வளைவில் இருசக்கர வாகனத்தில் திரும்பிய பொழுது நிலை தடு மாறிய பைக் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கரன்சந்த் உயிரிழந்தார்.

error: Content is protected !!