News October 8, 2025
+2 மதிப்பெண் சான்று.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

2014 – 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனித்தேர்வர்களாக +2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் சுமார் 2 லட்சம் பேர் இன்னும் மார்க் ஷீட்டை பெற்றுக்கொள்ளவில்லை என TN அரசு தெரிவித்துள்ளது. 2026 ஜனவரி 10-ம் தேதிக்குள் மார்க் ஷீட்டை பெற்றுக்கொள்ளாவிட்டால் அவற்றை அழிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், மார்க் ஷீட்டை வாங்காதவர்கள் உடனடியாக கல்வித்துறையை அணுகி பெற்றுக்கொள்ளவும். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 8, 2025
எந்த பாத்திரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?

உணவுகளை போல், நாம் உணவுகளை வைக்க உதவும் பாத்திரங்களும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. எந்த பாத்திரங்களில் சாப்பிட்டால் என்ன நன்மைகள், அந்த பாத்திரங்களில் என்ன செய்யக்கூடாது என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க உங்க வீட்டில் எந்த வகை பாத்திரங்களை பயன்படுத்துறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 8, 2025
BREAKING: கரூர் செல்கிறார் விஜய்

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க பாதுகாப்பு கேட்டு விஜய் மனு அளித்திருந்த நிலையில், கரூர் மாவட்ட SP-யை அணுக DGP அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இது ஒருவகையில் அவருக்கு கிடைத்த கிரீன் சிக்னல் என தவெகவினர் கூறுகின்றனர். இதனால், SP-யிடம் நேரம், இடம் குறித்த தகவலை கொடுத்து அனுமதி பெற்று ஓரிரு நாள்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
News October 8, 2025
திரை நாயகரை வழிபடுகிறோம்: ரிஷப் ஷெட்டி

நாம் திரை நடிகரை வழிபடும் மனநிலையில் உள்ளோம் என்று கரூர் துயரம் குறித்த கேள்விக்கு ரிஷப் ஷெட்டி பதிலளித்துள்ளார். இது வேண்டுமென்ற செய்யப்பட்டது அல்ல என்ற அவர், பலர் செய்த கூட்டு தவறாக இருக்கலாம் என கூறியுள்ளார். சில சமயங்களில் போலீஸால் கூட கும்பலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என தெரிவித்தார். முன்னதாக, கரூர் சம்பவத்தால், சென்னையில் நடைபெறவிருந்த காந்தாரா பட விழா ரத்து செய்யப்பட்டிருந்தது.