News April 15, 2024

திண்டுக்கல்: கண்டுகொள்ளாத சொந்தக்கட்சி  

image

பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அவரது கட்சியைச் சேர்ந்த நிறுவனத் தலைவர் ராமதாஸ் மாநில தலைவர் அன்புமணி கவுரவத் தலைவர் கோ . க. மணி உள்ளிட்ட யாரும் இதுவரை வரவில்லை. பிரச்சாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், திலகபாமா தனித்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. 

Similar News

News August 22, 2025

திண்டுக்கல்: ‘வாட்ஸ் ஆப்’மூலம் ரூ.8 லட்சம் அபேஸ்!

image

திண்டுக்கல்: சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் சேட்(52. வியாபாரியான இவரது எண்ணிற்கு சில நாட்களுக்கு முன் குறுந்தகவலில் ’இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம்!’ எனக் கூறி அவரை குழுவில் இணைத்து, சுமார் ரூ.8 லட்சம் வரை வாங்கி ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் உங்களை அணுகினால் உடனே 1930 என்ற எண்ணை அழைக்கவும்.

News August 22, 2025

திண்டுக்கல்: மாரத்தான் ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி என்ற குறிக்கோளுடன் 23-ம் தேதி காலை 06.00 மணிக்கு டட்லி பள்ளி மைதானத்திலிருந்து அங்குவிலாஸ் பள்ளி மைதானம் வரை “விழிப்புணர்வு மாரத்தான்” நடத்தப்படவுள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

திண்டுக்கல்லில் கூட்டுறவு வங்கியில் வேலை APPLY NOW!

image

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 32 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்

error: Content is protected !!