News October 8, 2025

சீமான் மீதான வழக்கை திரும்பப்பெற தயார்: நடிகை

image

நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான். இதனால் தனது கண்ணியம் மீட்டெடுக்கப்படும் என நடிகை (விஜயலட்சுமி) தெரிவித்துள்ளார். அதோடு, சீமானால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்பதால் அவர் இழப்பீடு வழங்க SC உத்தரவிட வேண்டும் என நடிகை கோரிக்கை வைத்துள்ளார். மேலும், SC-யின் அறிவுறுத்தலின்படி சீமான் மீதான வழக்கை திரும்பப்பெற தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News October 8, 2025

நவீன ஆயுதங்களை வாங்கும் இந்தியாவின் அண்டை நாடுகள்

image

பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 AMRAAM ரக ஏவுகணைகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல், சீனாவிடம் இருந்து 20 J-10CE ரக போர் விமானங்களை வங்கதேசம் வாங்க உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள் நவீன ஆயுதங்களை வாங்கி குவிப்பது, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதேபோல், இரு நாடுகள் உடனான இந்தியாவின் உறவு தற்போது விரிசல் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

News October 8, 2025

₹500 கோடி வசூலை நெருங்கிய காந்தாரா: சாப்டர் 1

image

கன்னடம் மட்டுமின்றி, தமிழ் உள்பட வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிநடை போட்டு வருகிறது ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படம் முதல் நாளிலேயே ₹100 கோடி வசூலை நெருங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், 6 நாள்களில் ₹427.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் ₹500 கோடியை எட்டுவது மட்டுமல்லாமல், ₹1,000 கோடி வசூலித்து Sandalwood-ல் புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 8, 2025

என்னது! உலகிலேயே ஆபத்தான உயிரினம் இதுவா?

image

கொசுதான் உலகிலேயே ஆபத்தான உயிரினம் என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. இந்த சிறிய பூச்சி கடிப்பதால், டெங்கு, மலேரியாவால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 7 – 10 லட்சம் பேர் வரை இறக்கின்றனர். 2025-ல் தமிழ்நாட்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த மோசமான உயிரினத்திடம் இருந்து உங்களை <<17946581>>பாதுகாத்துக்கொள்ளுங்கள்<<>> மக்களே. SHARE.

error: Content is protected !!