News October 8, 2025
வதந்திகளுக்கு பதிலளித்த ரஷ்மிகா!

திரைக்கு பின்னால் நடப்பது உலகுக்கு தெரியாது என நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கன்னட திரைப்படங்களில் நடிக்க ரஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், மற்றவர்கள் என்ன நினைத்தாலும் கவலையில்லை என்றார். மேலும், தனது நடிப்பு குறித்து பிறர் என்ன பேசுகிறார்கள் என்பதை மட்டுமே தான் கவனிப்பதாகவும் ரஷ்மிகா கூறினார்.
Similar News
News October 8, 2025
தீபாவளிக்கு இப்படி Dress பண்ணுங்க..

தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்புகளுக்கு மட்டுமல்ல, புத்தாடைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்த தீபாவளிக்கு எப்படி டிரஸ் பண்ணா நல்லா இருக்கும், டிரெண்டில் இருக்கும் மாடல்கள் என்னென்னனு தெரியலையா? கவலைய விடுங்க. தீபாவளிக்கு நீங்கள் மேலும் அழகாக தெரிய மேலே கொடுக்கப்பட்டிருக்கும் போட்டோக்களில் உள்ளது போல டிரெஸ் பண்ணுங்க. உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.
News October 8, 2025
பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய மாற்றம்

சொத்துகளை வாங்குவது, விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த TN அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்தாண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம். SHARE IT.
News October 8, 2025
தேர்தல் தேதி மோடிக்கு முன்கூட்டியே தெரியும்: KN நேரு

பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள், பட்டியலின மக்களின் வாக்குரிமையை பறிப்பதே SIR-யின் நோக்கம் என KN நேரு விமர்சித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தல் தேதி மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறிய அவர், அதனால்தான் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழகத்தில் முதல்கட்ட பரப்புரையை மோடி முடித்தார் என்றும் கூறியுள்ளார். பாஜகவின் நடவடிக்கைகளுக்கு ECI துணை போகக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.