News October 8, 2025

N.ஆனந்த் பதுங்கியிருக்கும் இடம் இதுவா? Official தகவல்

image

கரூர் துயரத்தை அடுத்து தவெக பொதுச்செயலாளர் N.ஆனந்தையும், நிர்மல் குமாரையும் தேடிவருகிறது போலீஸ். இவர்கள் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் ஆனந்த் பதுங்கியிருக்கிறாரா என்பது பற்றி எதுவும் தெரியாது எனவும், இதுகுறித்து TN போலீஸ் தங்களை அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 8, 2025

என்னது! உலகிலேயே ஆபத்தான உயிரினம் இதுவா?

image

கொசுதான் உலகிலேயே ஆபத்தான உயிரினம் என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. இந்த சிறிய பூச்சி கடிப்பதால், டெங்கு, மலேரியாவால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 7 – 10 லட்சம் பேர் வரை இறக்கின்றனர். 2025-ல் தமிழ்நாட்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த மோசமான உயிரினத்திடம் இருந்து உங்களை <<17946581>>பாதுகாத்துக்கொள்ளுங்கள்<<>> மக்களே. SHARE.

News October 8, 2025

கொலை செய்வது எப்படி? சிறுவனால் அதிர்ந்த ChatGPT !

image

ஒரு டெக்னாலஜியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் நன்மையும், தீமையும். USA-வில் 13 வயது பள்ளி சிறுவன், தனது நண்பனை எப்படி கொல்வது என ChatGPT-யிடம் கேட்டுள்ளான். இது பள்ளியின் Digital Monitoring மூலம் போலீசுக்கு தெரியவந்தது. விசாரணையின்போது, தான் விளையாட்டாக இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளான். சிறுவர்கள் டெக்னாலஜிகளை எப்படி யூஸ் பண்றாங்க என பெரியவர்கள் கண்காணிப்பது மிகவும் அவசியம்.

News October 8, 2025

தீபாவளி பண்டிகை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

தீபாவளி நெருங்கி வருவதால், பலகார உற்பத்தி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பலகார விற்பனையாளர்கள் FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும் என TN அரசு தெரிவித்துள்ளது. முறையாக அனுமதியின்றி இனிப்பு, பலகாரம் விற்பனை செய்தால் ₹10 லட்சம் அபராதம், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். தரமான பொருள்களையே பலகார தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும். மக்கள் TNFSD Consumer App (அ) 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!