News October 8, 2025
கரூர் செல்ல அனுமதி கேட்டார் விஜய்

கரூர் செல்ல விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் தவெக தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்திக்க விஜய் தரப்பு பாதுகாப்பு கேட்ட நிலையில், கரூர் போலீஸ் எந்த பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், டிஜிபி அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி அளித்த உடனே விஜய் கரூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 8, 2025
தீபாவளி பண்டிகை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

தீபாவளி நெருங்கி வருவதால், பலகார உற்பத்தி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பலகார விற்பனையாளர்கள் FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும் என TN அரசு தெரிவித்துள்ளது. முறையாக அனுமதியின்றி இனிப்பு, பலகாரம் விற்பனை செய்தால் ₹10 லட்சம் அபராதம், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். தரமான பொருள்களையே பலகார தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும். மக்கள் TNFSD Consumer App (அ) 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
News October 8, 2025
இதெல்லாம் கண்களுக்கு தெரியும்.. ஆனா தெரியாது

அளவில் பெரியதாக இருந்தால் எளிதாக கண்களுக்கு தென்படும். ஆனால், அளவில் சிறியதாக இருப்பதை, பலராலும் அடையாளம் காண முடியாது. சிறியதாக இருப்பவை, தனித்துவமாகவும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலே, சிலவற்றை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களை ஆச்சரியப்பட வைத்தது எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 8, 2025
கரூர் துயரம்.. கண்ணீர் சிந்திய விஜய்

கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். குறிப்பாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை துருவ் விக்னேஷின் அத்தையுடன் பேசியபோது, குழந்தை புகைப்படத்தை பார்த்துக் கண்ணீர் சிந்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தையின் தாயார் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த அவர், மேலும் வேதனையடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.