News October 8, 2025
திருச்சி வந்த துணை முதலமைச்சர்

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டு, திருச்சி வந்தடைந்தார். அவரை அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
Similar News
News October 8, 2025
திருச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருச்சி மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News October 8, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 14-ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வரும் 15-ம் தேதியும், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறையை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்
News October 8, 2025
திருச்சி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. ஆரம்ப தேதி: 21.10.2025
6. கடைசி தேதி: 20.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <