News October 8, 2025
தவெகவுக்கு போட்டியாக திமுக கையில் எடுக்கும் வியூகம்

தவெகவை விட அதிக இளைஞர்களை சேர்க்கணும் எனும் முனைப்பில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, 3 லட்சம் இளைஞர்கள் பட்டாளத்தோடு இளைஞரணி மாநில மாநாடு இம்மாதம் கோவையில் நடக்கவுள்ளதாம். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் அசைன்மென்ட் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்புக்கு உட்படும் இளைஞர்களை தேர்வு செய்து மக்கள் பாதிக்காத வகையில் மாநாட்டை நடத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
Similar News
News October 8, 2025
இதில் உங்க சாய்ஸ் எது?

நீண்ட கால சேமிப்பு தொடங்க விரும்புபவர்களுக்கு, எப்படி சேமிக்கலாம், எதில் முதலீடு செய்யலாம், என்று பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். ஆரம்பத்தில், பெரிய ரிஸ்க் எடுக்காமால், அரசு ஆதரவு உள்ள பாதுகாப்பான சில முதலீடுகளை செய்யலாம். அவை என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து சேமிப்பை தொடங்குங்கள்.
News October 8, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் மாற்றம்

ஊர், தெரு, சாலைகளின் பெயர்களுக்கு பின்னால் உள்ள <<17949340>>சாதிப் பெயர்களை நீக்க<<>> TN அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆதார், ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பெயர் மாற்றத்தை உள்ளாட்சி, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்த பிறகு, TNeGA, ELCOT மூலம் ஆதார், ரேஷன் கார்டுகளில் முகவரி திருத்தங்கள் செய்ய மக்களுக்கான முகாம்கள் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. SHARE IT.
News October 8, 2025
11 நாள்களுக்கு பிறகு தவெக ராஜ்மோகன் உருக்கம்

கரூர் துயரில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக துணை பொ.செ., ராஜ்மோகன் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் பரவின. இதனால் அவர் குறித்த மீம்ஸ் SM-ல் பரவின. இந்நிலையில், 11 நாள்களுக்கு பிறகு ராஜ்மோகன் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் வலியில் பங்கெடுத்து கொள்வதாலேயே இந்த அமைதி என்றும் விளக்கமளித்துள்ளார்.