News October 8, 2025
ரோஹித் சர்மாவை அவமதித்த BCCI: மனோஜ் திவாரி

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ODI கேப்டன் பொறுப்பை கில்லிடம் வழங்கியது சர்ச்சையானது. இந்நிலையில், தலைவர் பதவியை பறித்து ரோஹித் சர்மாவை BCCI அவமதித்துள்ளதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக ரோகித் நிறைய விஷயங்களை செய்திருப்பதாகவும், அவரை தலைமை பதவியில் இருந்து தூக்க எந்த உருப்படியான காரணமும் இல்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News October 8, 2025
பிரசாதங்களுக்கு பெயர்பெற்ற கோயில்கள்

கோயில்கள் பல்வேறு காரணங்களால் பிரபலமாக உள்ளன. அதில், சில கோயில்கள் பிரசாதங்களுக்கு பெயர்பெற்றவை. அவை எந்த கோயில்கள், அங்கு என்ன பிரசாதம் கிடைக்கும் என்பதை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்க ஊர் கோயில்களில் என்ன பிரசாதம் கிடைக்கும் என்று கமெண்ட்ல சொல்லுங்க.
News October 8, 2025
பாடகர் மர்ம மரணத்தில் டிஎஸ்பி கைது

சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின் போது அசாம் பாடகர் ஜுபின் கார்க் உயிரிழந்த விவகாரத்தில், அவரின் உறவினரும், அசாம் டிஎஸ்பியுமான சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுபின் கார்க் ஸ்கூபா டைவிங் செய்தபோது சந்தீபன் கார்க் உடனிருந்ததாக கூறப்படுகிறது. புலனாய்வு துறையினரின் தீவிர விசாரணைக்கு பின் அவரை கைது செய்துள்ளனர். பாடகர் ஜுபின் கார்க் மர்ம மரணம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News October 8, 2025
காசாவை பற்றி ஸ்டாலினுக்கு எதற்கு கவலை? அண்ணாமலை

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனித உரிமை மீறலுக்கு எதிரான போராட்டத்தில் CM ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிலையில், கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு ஸ்டாலின் அவர்களே என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.