News October 8, 2025
₹2,500-ஆக உயர்கிறதா பென்ஷன்?

EPFO-வின் EPS-95 கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ₹1,000-ல் இருந்து ₹2,500 ஆக உயர்வதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பணவீக்கத்தின் காரணமாக மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில்தான், வரும் 10 & 11-ம் தேதிகளில் மத்திய அறங்காவலர் குழுவில் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Similar News
News January 13, 2026
விஜய்யிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக CBI விசாரணைக்கு விஜய் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது, கூட்ட நெரிசல் நடந்தது எப்படி? எத்தனை பேர் கூடுவார்கள் என்பது முன்பே தெரியுமா? பரப்புரைக்கு தாமதமாக வர காரணம் என்ன? போலீசார் தடியடி நடத்தியது தெரியுமா? என்பது உள்ளிட்ட 100 கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவர் அளித்த பதில்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
News January 13, 2026
ராஜ்யசபா + 10 சீட்.. NDA-வை அதிரவைக்கும் TTV

NDA கூட்டணியில் இணைய TTV தினகரன் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு ராஜ்யசபா MP சீட், 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் மத்தியில் ஒரு இணையமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என கூறி அதிர வைத்துள்ளாராம். இதையடுத்து அவரை டெல்லி வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். இதனால், அவர் விரைவில் டெல்லி பறக்கலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 13, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு சிலருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிரமம் இருந்தது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் முதியவர்களின் விரல் ரேகை பதிவு செய்யும் போது, ஒப்புதல் பெற தாமதம் ஏற்படுவதால், அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, விரல் ரேகை சரிபார்ப்பில் பாதிப்பு ஏற்பட்டால், கண் கருவிழி ரேகை கருவியை பயன்படுத்தி, பொங்கல் தொகுப்பு வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.


