News October 8, 2025

9-வது பேட்ஸ்மேனாக கூட இறங்குவேன்: சஞ்சு சாம்சன்

image

நடப்பாண்டு சிறந்த பேட்ஸ்மேனுக்கான CEAT T20I Batter விருதை சஞ்சு சாம்சன் வென்றுள்ளார். இந்த விருதை தனது மனைவிக்கு சமர்பிப்பதாகவும், இந்திய அணி ஜெர்ஸியில் விளையாட 10 ஆண்டுகள் கடினமாக உழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கில்லின் டி20 வருகையால் மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, 9-வது பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலிங் செய்ய சொன்னாலோ கூட அணிக்காக செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News October 8, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹3,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை இன்று(அக்.8) ஒரே நாளில் கிலோவுக்கு ₹3,000 அதிகரித்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 1 கிராம் ₹170-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது. <<17947867>>தங்கத்துடன்<<>> போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 8 நாள்களில் மட்டும் ஒரு கிலோவுக்கு ₹10,000 அதிகரித்துள்ளது.

News October 8, 2025

1GB டேட்டா ஒரு கப் டீயை விட குறைவு: மோடி

image

இந்தியாவில் 1GB மொபைல் டேட்டாவின் விலை ஒரு கப் டீயை விட குறைவு என்று PM மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொபைல் காங்கிரஸ் 2025 நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் மொபைல் உற்பத்தி 28 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், 127 மடங்கு ஏற்றுமதி உயர்ந்துள்ளதாகவும் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி துறையில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 8, 2025

அண்ணாமலை தலைமையில் உருவாகிறதா தனி கூட்டணி?

image

நயினாருடன் பனிப்போர், EPS-வுடனான பழைய பகை உள்ளிட்டவை காரணமாக தனிகட்சி தொடங்க அண்ணாமலை மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதற்காக, டிடிவி, OPS, அன்புமணி, ஜான் பாண்டியனை அவர் ரகசியமாக சந்திக்கிறாராம். அதிமுகவை கைப்பற்றணும் என தினகரனும், அரசியல் ஆளுமை ஆகலாம் என அண்ணாமலையும் போடும் கணக்கே இதற்கு காரணம் என்கின்றனர். இதை அறிந்தும் டெல்லி தலைமை அமைதி காப்பதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

error: Content is protected !!