News October 8, 2025
Hand Dryer யூஸ் பண்றீங்களா.. உஷாரா இருங்க!

எங்கும் இருக்கும் இந்த Hand Dryers உடலுக்கு மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Hand Dryer-கள் பாத்ரூமில் உள்ள காற்றை உள்ளிழுத்து சூடாக்கி, கைகளில் அடிக்கிறது. இதனால், பாத்ரூமில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்றவை நேராக கைகளில் படருகின்றன. பல நோய்தொற்று பாதிப்புகளும் இதன் காரணமாக ஏற்படுவதாக எச்சரிக்கப்படுகிறது. எனவே, Tissue Paper-கள் பயன்படுத்துவதை வழக்கமாக்கிகோங்க. SHARE IT.
Similar News
News October 8, 2025
சீமான் மீதான வழக்கை திரும்பப்பெற தயார்: நடிகை

நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான். இதனால் தனது கண்ணியம் மீட்டெடுக்கப்படும் என நடிகை (விஜயலட்சுமி) தெரிவித்துள்ளார். அதோடு, சீமானால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்பதால் அவர் இழப்பீடு வழங்க SC உத்தரவிட வேண்டும் என நடிகை கோரிக்கை வைத்துள்ளார். மேலும், SC-யின் அறிவுறுத்தலின்படி சீமான் மீதான வழக்கை திரும்பப்பெற தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
News October 8, 2025
வதந்திகளுக்கு பதிலளித்த ரஷ்மிகா!

திரைக்கு பின்னால் நடப்பது உலகுக்கு தெரியாது என நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கன்னட திரைப்படங்களில் நடிக்க ரஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், மற்றவர்கள் என்ன நினைத்தாலும் கவலையில்லை என்றார். மேலும், தனது நடிப்பு குறித்து பிறர் என்ன பேசுகிறார்கள் என்பதை மட்டுமே தான் கவனிப்பதாகவும் ரஷ்மிகா கூறினார்.
News October 8, 2025
உருக்கமாக மன்னிப்பு கேட்டார் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தாரிடம் விஜய் பேசியபோது, தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார். தம்பியை பறிகொடுத்த பெண் ஒருவர் அளித்த பேட்டியில், உங்கள் இழப்பு தாங்க முடியாத இழப்பு, என்னை (விஜய்) தம்பியாக நினைத்து கொள்ளுங்கள். என்மீது தப்புதான்; என்னை மன்னிச்சிடுங்க. வரமுடியாத சூழலில் போயிட்டேன். கோர்ட் ஆர்டர் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என விஜய் உருக்கமாக பேசியதாக தெரிவித்துள்ளார்.