News October 8, 2025
ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர்

டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க வீடு வீடாகச் சென்று, மழைநீர் தேங்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் 15,796 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 8 பேர் இறந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களுக்கு இணைநோய் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மருந்து தெளித்தல் போன்ற பல பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 8, 2025
எல்லா இளைஞர்களுக்கும் ₹15,000 வழங்கும் அரசு

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ₹15,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் பயன்பெற EPFO-வில் பதிவு செய்திருக்க வேண்டும், மாதம் சம்பளம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News October 8, 2025
சீமான் மீதான வழக்கை திரும்பப்பெற தயார்: நடிகை

நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான். இதனால் தனது கண்ணியம் மீட்டெடுக்கப்படும் என நடிகை (விஜயலட்சுமி) தெரிவித்துள்ளார். அதோடு, சீமானால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்பதால் அவர் இழப்பீடு வழங்க SC உத்தரவிட வேண்டும் என நடிகை கோரிக்கை வைத்துள்ளார். மேலும், SC-யின் அறிவுறுத்தலின்படி சீமான் மீதான வழக்கை திரும்பப்பெற தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
News October 8, 2025
வதந்திகளுக்கு பதிலளித்த ரஷ்மிகா!

திரைக்கு பின்னால் நடப்பது உலகுக்கு தெரியாது என நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கன்னட திரைப்படங்களில் நடிக்க ரஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், மற்றவர்கள் என்ன நினைத்தாலும் கவலையில்லை என்றார். மேலும், தனது நடிப்பு குறித்து பிறர் என்ன பேசுகிறார்கள் என்பதை மட்டுமே தான் கவனிப்பதாகவும் ரஷ்மிகா கூறினார்.