News April 15, 2024
நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகரிக்கும்

இந்தியாவில் நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், நீண்டகால அடிப்படையில் சராசரி மழைப்பதிவு 106% ஆக பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பருவமழை அதிகரிப்பதற்கு, இந்திய பெருங்கடல் இருமுனை உருவாக்கம் மற்றும் பசிபிக் பகுதியில் உருவாகும் ‘லா நினா’ காரணமென வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Similar News
News December 30, 2025
பொங்கல் பரிசுத் தொகை.. புதிய அறிவிப்பு வெளியானது

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்படலாம். இதனால் பொங்கல் பரிசும் கிடைக்காது என கூறப்படுகிறது. எனவே ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று, e-KYC சரிபார்ப்பை முடிங்க. SHARE.
News December 30, 2025
நாளையே கடைசி.. பான் கார்டு வேலை செய்யாது!

வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இணைக்கத் தவறினால், புத்தாண்டு முதல் உங்கள் பான் கார்டு செயல்பாட்டை இழந்துவிடும் (inoperative). மேலும், செயலற்ற பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, ₹1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உடனே பான் – ஆதாரை இணைத்து விடுங்கள். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
News December 30, 2025
EPS-க்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

சிறுவர்கள் கையில் கூட போதைப்பொருள் இருப்பதாக <<18703918>>EPS<<>> விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சு., EPS முதல்வராக இருந்தபோது தான் TN-ல் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி, தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதாக அவர் கூறினார். எங்கேயாவது விற்கப்படுகிறது என்பதை எதிர்க்கட்சியினர் கூறினால், நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


