News October 8, 2025
முன்பதிவு ரயில் டிக்கெட்களில் தேதியை மாற்றலாம்

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களை, வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, 2026 ஜனவரியில் அமலாகும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாற்றப்படும் தேதிக்கான கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்தினால் போதும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது டிக்கெட்டை கேன்சல் செய்து (குறிப்பிட்ட கட்டணம் பிடிக்கப்படும்), புதிதாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
Similar News
News October 8, 2025
கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின் ரோஹித்தின் முதல் பேச்சு

கேப்டன் பதவி பறிபோன பிறகு முதல்முறையாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதை சரியாக பயன்படுத்த முயற்சி செய்வதாகவும், அணியின் வெற்றிக்கு சிறு காரணமாக இருப்பதை நினைத்து பெருமை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 8, 2025
தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக <<17946346>>தஷ்வந்துக்கு<<>> எதிராக முறையான ஆதாரம் இல்லை என SC தெரிவித்துள்ளது. குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட DNA மாதிரிகளும் குற்றச்சம்பவத்துடன் ஒத்துப்போகவில்லை. ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட CCTV காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் தான் என்பது முறையாக உறுதிபடுத்தவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது.
News October 8, 2025
BIG BREAKING: மன்னிப்புக் கேட்டார் சீமான்

நடிகை (விஜயலட்சுமி) குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு SC-யில் சீமான் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நடிகை தொடர்பாக தனது அனைத்து கருத்துகளையும் பேட்டிகளையும் திரும்ப பெறுவதாகவும், நடிகைக்கு எதிராக ஊடகங்களில் இனி எந்த கருத்தையும் தெரிவிக்கப்போவதில்லை என்றும் சீமான் உறுதியளித்துள்ளார். மேலும், நடிகை தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.