News October 8, 2025
சென்னை: காதலியை பார்க்க சென்றவருக்கு கத்தி குத்து

சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்தவர் பாபு, இவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த பெண்ணை காதலித்து வருகிறார். நேற்று அப்பெண்ணை பார்ப்பதற்காக அந்த பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த 5 பேர் பாபுவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி விட்டு தப்பினர். அருகில் இருந்தவர்கள் பாபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் பார்த்திபன், சூர்யா உள்ளிட்ட 5பேரை கைது செய்தனர்.
Similar News
News October 8, 2025
சென்னை: உங்க ஆதார் கார்டை வேறுயாராவது யூஸ் பண்றாங்களா?

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்
News October 8, 2025
சென்னை: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை ரத்து!

சென்னை, 2017ம் ஆண்டு தன் வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியை தஷ்வந்த் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் இன்று (அக்.8) இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், தஷ்வந்த் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
News October 8, 2025
சென்னை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

சென்னை மக்களே…! கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது (தமிழ்நாட்டில் மட்டும் 394). 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள் <