News October 8, 2025
ரஷ்யாவிற்காக போரிட்ட இந்தியரை பிடித்த உக்ரைன்

ரஷ்யாவிற்காக போரிட்ட இந்தியர் ஒருவரை உக்ரைன் படைகள் சரணடைய செய்துள்ளன. குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சஹில் முகமது ஹுசேன் என்பவர் ரஷ்யாவிற்கு படிக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கு போதைப்பொருள் பயன்படுத்தியதால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் ரஷ்யாவிற்காக போரில் சண்டையிட சம்மதித்துள்ளார். இதுபற்றி அவர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது.
Similar News
News October 8, 2025
BIG BREAKING: மன்னிப்புக் கேட்டார் சீமான்

நடிகை (விஜயலட்சுமி) குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு SC-யில் சீமான் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நடிகை தொடர்பாக தனது அனைத்து கருத்துகளையும் பேட்டிகளையும் திரும்ப பெறுவதாகவும், நடிகைக்கு எதிராக ஊடகங்களில் இனி எந்த கருத்தையும் தெரிவிக்கப்போவதில்லை என்றும் சீமான் உறுதியளித்துள்ளார். மேலும், நடிகை தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
News October 8, 2025
யார் இந்த தஷ்வந்த்?

சென்னையில் 2017-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த அவர், தனது அம்மாவையும் கொலை செய்தார். இந்த இரு வழக்குகளிலும் 46 வருடம் சிறை, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அம்மா கொலை வழக்கில், அவரின் அப்பா பிறழ்சாட்சியாக மாறியதால், அந்த வழக்கில் இருந்து <<17946346>>தஷ்வந்த்<<>> விடுவிக்கப்பட்டார்.
News October 8, 2025
தவெகவுக்கு போட்டியாக திமுக கையில் எடுக்கும் வியூகம்

தவெகவை விட அதிக இளைஞர்களை சேர்க்கணும் எனும் முனைப்பில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, 3 லட்சம் இளைஞர்கள் பட்டாளத்தோடு இளைஞரணி மாநில மாநாடு இம்மாதம் கோவையில் நடக்கவுள்ளதாம். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் அசைன்மென்ட் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்புக்கு உட்படும் இளைஞர்களை தேர்வு செய்து மக்கள் பாதிக்காத வகையில் மாநாட்டை நடத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.