News October 8, 2025
DENGUE: திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட்!

டெங்கு காய்ச்சல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் மட்டும் 1,171 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் 3,665 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் வீடுகளை சுற்று மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் மக்களே. லேசான காய்ச்சல் இருந்தால் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்.
Similar News
News October 31, 2025
திருவள்ளூர்: மனித மிருகத்திற்கு சிறை..!

திருவள்ளூர் மாவட்டம் நயப்பாக்கம் சேர்ந்த யுவராஜ்29 கடந்த 2018-ல் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் யுவராஜை புழல் சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சாட்சியங்களின் குற்றம் நிரூபணமாகி குற்றவாளிக்கு 23 ஆண்டுகள் சிறை ரூ.21,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News October 31, 2025
திருவள்ளூர்: ரயில்வேயில் 5,810 பணியிடங்கள்- APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 31, 2025
திருவள்ளூர் மாணவர்களுக்கு GOOD NEWS!

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தொடர்ச்சியாக தயார்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (நவ.05) அன்று காலை 10.30 மணிக்கு துவக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


