News October 8, 2025
பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல்.. SC புதிய உத்தரவு

பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 3.66 லட்சம் விவரங்களை நாளைக்குள் அளிக்க EC-க்கு SC உத்தரவிட்டுள்ளது. இறுதி பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட SC, அவை நீக்கப்பட்ட பெயர்களின் சேர்க்கையா அல்லது புதிய பெயர்களின் சேர்க்கையா என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இவ்வழக்கில் இருட்டில் இருந்தபடி முடிவெடுக்க முடியாது எனவும் SC தெரிவித்துள்ளது.
Similar News
News October 8, 2025
தவெகவுக்கு போட்டியாக திமுக கையில் எடுக்கும் வியூகம்

தவெகவை விட அதிக இளைஞர்களை சேர்க்கணும் எனும் முனைப்பில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, 3 லட்சம் இளைஞர்கள் பட்டாளத்தோடு இளைஞரணி மாநில மாநாடு இம்மாதம் கோவையில் நடக்கவுள்ளதாம். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் அசைன்மென்ட் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்புக்கு உட்படும் இளைஞர்களை தேர்வு செய்து மக்கள் பாதிக்காத வகையில் மாநாட்டை நடத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
News October 8, 2025
அடுத்த வழக்கை தொடர்ந்த தவெக

கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை HC அமைத்திருந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையிலான குழு அக்.5-ம் தேதி விசாரணையை தொடங்கியது. இந்நிலையில், இந்த விசாரணை குழுவுக்கு தடை கோரி SC-யில் தவெக மேல்முறையீடு செய்துள்ளது. தங்களுடைய கருத்தை கேட்காமல் குழுவை அமைத்ததாகவும், SIT குழு பாரபட்சமாக விசாரணை நடத்தும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 8, 2025
ஒரு தண்ணீர் பாட்டிலில் 2 லட்சம் Nano- Plastics துகள்கள்! உஷார்!

1 லிட்டர் வாட்டர் பாட்டிலில் சுமார் 2,40,000 நானோ பிளாஸ்டிக் துகள்கள் ஒளிந்திருக்கின்றன தெரியுமா? பிளாஸ்டிக் பாட்டில்கள் ஏற்படும் பாதிப்புகள் கற்பனைக்கும் எட்டாதவை. US-ன் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வின்படி, இந்த நானோ பிளாஸ்டிக்குகள் உள்ளுறுப்புகள் & ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு பல பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இனி பிளாஸ்டிக் பாட்டில் மூடியை திறக்கும் போது, இதை ஞாபகம் வெச்சிக்கோங்க. SHARE.