News October 8, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஆக்.,12-ம் தேதி (ஞாயிறு) 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ரயில்-பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 582 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குளிச்சார் பகுதியை சேர்ந்த விமல்ராஜ், சாலமன், கலைவாணன் ஆகியோர் கடந்த 2021ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளிகள் மூவருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார்.

News October 16, 2025

மயிலாடுதுறை: உயிர் தப்பிய குழந்தைகள்

image

கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கனமழை காரணமாக அருகில் இருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மீது 100 ஆண்டுகள் பழமையான அரசமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதில் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அங்கன்வாடி மைய கட்டிடத்தில் உள்ளே இருந்த குழந்தைகள் எந்த பாதிப்பும் இன்றி உயிர்த்தபினர்.

error: Content is protected !!