News October 8, 2025
₹1000 கோடி வசூலிக்குமா ‘காந்தாரா: சாப்டர் 1’

இதுவரை ₹400 கோடி வசூலை கடந்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ ₹1000 கோடி வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இப்படம், தீபாவளி வாரத்தை கடந்தும் வெற்றிகரமாக ஓட அதிக வாய்ப்புள்ளது. எனினும், இந்தி பெல்டில் இப்படம் ஈட்டும் வசூலை பொறுத்தே ₹1,000 கோடி சாத்தியமாகும் என்றும் அதிகபட்சமாக ₹700-₹800 கோடி வசூல் உறுதி எனவும் திரையுலகை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News October 8, 2025
யாரும் எதிர்பார்க்காத புதிய கூட்டணி: டிடிவி தினகரன்

தனது பிரச்சார கூட்டத்தில் தவெக கொடியை காட்டுவது, ஆதரவு போஸ்டர்களை ஒட்டுவது என EPS கூட்டணிக்காக முயற்சிப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். அதனால் தான் மனதில் ஈரம் இல்லாமல் கரூர் துயரத்திற்கு அரசு மீது பழிபோடுவதாகவும், நடுநிலையாக சொன்னால், கரூர் விவகாரத்தில் CM பெருந்தன்மையுடன் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், யாரும் எதிர்பார்க்காத புதிய கூட்டணி அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 8, 2025
BREAKING: சென்னையில் பிரபல நடிகர் வீட்டில் பரபரப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஏற்கெனவே, சட்டவிரோதமாக பூடானில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த புகாரில் கேராளவில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News October 8, 2025
கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் பாஜக?

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா மற்றும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று EPS-ஐ சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில், வரும் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த மக்களவை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற தொகுதிகள் மற்றும் கொங்கு மண்டலத்தில் அதிக சீட்களை கேட்டுள்ளதாம்.