News October 8, 2025
தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 16 முதல் 19-ம் தேதி வரை 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினமும் 2,092 பேருந்துகளுடன் 4 நாட்களுக்கும் சேர்த்து 5,900 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக, 14,268 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு, 6,110 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Similar News
News October 8, 2025
சென்னை: காதலியை பார்க்க சென்றவருக்கு கத்தி குத்து

சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்தவர் பாபு, இவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த பெண்ணை காதலித்து வருகிறார். நேற்று அப்பெண்ணை பார்ப்பதற்காக அந்த பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த 5 பேர் பாபுவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி விட்டு தப்பினர். அருகில் இருந்தவர்கள் பாபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் பார்த்திபன், சூர்யா உள்ளிட்ட 5பேரை கைது செய்தனர்.
News October 8, 2025
DENGUE: சென்னைக்கு ரெட் அலெர்ட்!

டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3,665 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூரில் 1,171 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் வீடுகளை சுற்று மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் மக்களே. லேசான காய்ச்சல் இருந்தால் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்.
News October 8, 2025
சென்னை: இரவு ரோந்து போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (07.10.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)