News October 8, 2025
மத்திய அரசு பள்ளிகளில் 7,267 காலிபணியிடங்கள்..

கல்வி அமைச்சகத்தில் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 7,267 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர், ஸ்டாப் நர்ஸ், ஹாஸ்டல் வார்டன் பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்ட நபராக இருக்க வேண்டும். கல்வி தகுதி: 10-ம் வகுப்பு முதல் துறை சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் https://nests.tribal.gov.in/ தளத்தில் வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
Similar News
News October 8, 2025
பென்ஸ் கார்கள் நாளொன்றுக்கு 277 விற்பனை

GST சீர்திருத்தத்தால் விலை குறைந்ததன் காரணமாக, நவராத்திரியில் பிரீமியம் கார்களான மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் அதிகளவு விற்பனையாகியுள்ளன. கடந்த 9 நாள்களில் 2,500 கார்கள் விற்பனையாகியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 277 கார்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கார்களின் சராசரி விலை ₹1 கோடியாகும். அதேபோல், கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 5119 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
News October 8, 2025
இளமையான தோற்றத்தை பெற இந்த மூலிகை தேநீரை குடிங்க!

✱புதினா தேநீர் அருந்துவது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ✱புதினா இலைகளை வெயிலில் உலர்த்தி, அவற்றை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும் ✱இதை தேனுடன் கலந்து அருந்தினால், சரும பாதிப்புகள் வெகுவாக குறையும் ✱புதினாவின் மணமும் சுவையும், இதனை அருந்தும்போது நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ✱ முகச் சுருக்கங்கள் நீங்கி, இளமையான தோற்றம் கிடைக்கும். SHARE IT.
News October 8, 2025
ஐசிசி விருது பட்டியலில் 3 இந்தியர்கள்

ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான வீரர், வீராங்கனை விருது பட்டியலில் 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசிய கோப்பையில் 314 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மாவும், 17 விக்கெட்கள் வீழ்த்திய குல்தீப் யாதவும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதே போல மகளிர் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு சதங்கள் விளாசிய ஸ்மிருதி மந்தானா இடம்பெற்றுள்ளார். இதில், அதிக வாக்கு பெறுவோருக்கு விருது வழங்கப்படும்.