News October 8, 2025
உயர்கல்வித்துறையை சீரழித்த திமுக அரசு: அன்புமணி

உயர்கல்வித்துறையை திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நான்கரை ஆண்டுகளில் 35 புதிய கல்லூரிகள் உருவாக்கியிருந்தாலும், ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்காததால், அவற்றில் சேர மாணவர்கள் தயாராக இல்லை என்று அன்புமணி சாடியுள்ளார்.
Similar News
News October 8, 2025
ரஷ்யாவிற்காக போரிட்ட இந்தியரை பிடித்த உக்ரைன்

ரஷ்யாவிற்காக போரிட்ட இந்தியர் ஒருவரை உக்ரைன் படைகள் சரணடைய செய்துள்ளன. குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சஹில் முகமது ஹுசேன் என்பவர் ரஷ்யாவிற்கு படிக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கு போதைப்பொருள் பயன்படுத்தியதால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் ரஷ்யாவிற்காக போரில் சண்டையிட சம்மதித்துள்ளார். இதுபற்றி அவர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது.
News October 8, 2025
இந்த விரதம் இருந்தால் இதயம் செயலிழக்குமா?

16 மணி நேரம் விரதம் இருக்கீங்களா? சரியான நேரத்தில் முறையாக விரதம் இருக்காவிட்டாலோ, விரதத்தின் போது நீர், சத்தான உணவுகள் எடுக்காமல் இருந்தாலோ இதய செயலிழப்பு ஏற்படலாம் என டாக்டர்கள் சொல்றாங்க. இந்த பாஸ்டிங்கை சரியான முறையில் கடைபிடிப்பது அவசியம். மாலை 6 மணிக்கு Dinner சாப்பிட்டு, அடுத்த நாள் காலை 10 மணிக்கு Breakfast சாப்பிடுங்கள். இடையில் தண்ணீர், இளநீர் போன்றவற்றை அருந்தலாம். SHARE.
News October 8, 2025
அன்பில் மகேஸ் நல்ல நடிகர்: எச்.ராஜா

சிவாஜியை விட அமைச்சர் அன்பில் மகேஸ் திறமையாக நடிக்கிறார் என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார். கரூர் துயரச் சம்பவத்துக்கு மாநில அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், கள்ளக்குறிச்சியில் 60 பேர் உயிரிழந்தபோது சென்று பார்க்காத ஸ்டாலின், கரூருக்கு மட்டும் ஏன் உடனடியாக சென்றார் என கேள்வி எழுப்பினார். மேலும் ஸ்டாலின், தான் என்ன பேசுகிறோம் என தெரியாமலேயே பேசுகிறார் என அவர் சாடினார்.