News October 8, 2025

காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆர்டிஇ அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்கான 10 நாள்கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 8, 2025

குன்றத்தூரில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

image

குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் வெங்கடேசன். அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

News October 8, 2025

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 11.10.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் தாமல் உத்திரமேரூர் வட்டத்தில் பினாயூர், வாலாஜாபாத் வட்டத்தில் சங்கராபுரம் , திருப்பெரும்புதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மாடம்பாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு

News October 8, 2025

காஞ்சிபுரம் மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!

image

காஞ்சிபுரத்தில் ஓரிக்கை மிலிட்டரி ரோடு தனலட்சுமி திருமண மஹால், ஸ்ரீபெரும்புதூர் ஏஜிஎஸ் மஹால், பண்ருட்டி காலணி சமுதாய கூடம், உத்திரமேரூர் பென்னலூர் சமுதாயகூடம், குன்றத்தூர் சிறுகளத்தூர் கேஎம் பேலஸ் ஆகிய பகுதிகளில் இன்று (அக்டோபர் 08) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் அரசின் அனைத்து அரசு சேவைகளையும் நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!