News April 15, 2024
மின்தடையை ஏற்படுத்தி திமுக பணப்பட்டுவாடா

அதிகாலை வேளையில் மின்தடையை ஏற்படுத்தி, திமுக பணப்பட்டு வாடா செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், காலை 4 முதல் 6 மணி வரை மின்தடை செய்யப்படுவதாகவும், இதையடுத்து வீடு வீடாக ₹500, ₹1,000 பட்டுவாடா செய்யப்படுவதாகவும் விமர்சித்தார். பணத்தை அளித்து வாக்கு பெறும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Similar News
News August 15, 2025
டிரம்ப் – புடின் சந்திப்பு… என்ன நடக்கும்?

இன்னும் சற்று நேரத்தில் அலாஸ்காவில் டிரம்ப்- புடின் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் உக்ரைன் போரை நிறுத்த உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை கொண்டு வருவதே இந்த சந்திப்பின் நோக்கம், உக்ரைனுக்காக பேசுவதல்ல என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். புடினோ, போரில் தான் பெற்றுள்ள வெற்றிகளை வைத்து பெரிய அளவில் பேரம் பேசும் முடிவுடன் உள்ளார். என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
News August 15, 2025
அரசு நிகழ்வில் ராகுல் ஏன் பங்கேற்கவில்லை? பாஜக

சுதந்திர தின விழாவில் ராகுல் காந்தி, கார்கே பங்கேற்காததை பாஜக விமர்சித்துள்ளது. ராகுல் நலமாக இருக்கிறாரா என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், தேசிய நிகழ்வுகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் இதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. நிகழ்வில் கலந்து கொள்ளாதது பற்றி இருவரும் இன்னும் விளக்கமளிக்கவில்லை. முன்னதாக காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ராகுல் பங்கேற்றார்.
News August 15, 2025
பொதுத்தேர்வு ரத்துக்கு இதுவே காரணம்.. அமைச்சர் விளக்கம்

11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தது ஏன் என அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு அடித்தளமாக இருக்க வேண்டுமே தவிர, மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக கல்வி திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அவர், பள்ளிகளில் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.