News October 8, 2025

UGC NET டிசம்பர் தேர்வு அறிவிப்பு வெளியானது

image

உதவி பேராசிரியர் மற்றும் JRF தகுதிக்கான NET தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான NET தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு இன்று முதல் நவ.7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதுகலை பட்டம் பெற்றவர்கள் (அ) இறுதியாண்டு முதுகலை மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

Similar News

News October 8, 2025

இந்த டயட் 40,000 உயிரிழப்புகளை தடுத்திடும்

image

தாவரங்கள் நிறைந்த Planetary ஹெல்த் டயட்டினால் தினமும் 40,000 உயிரிழப்புகளை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழங்கள், காய்கறிகள், பருப்புகள், நட்ஸ், சிறிதளவு இறைச்சி அடங்கிய இந்த டயட் பின்பற்றினால் சராசரி வாழ்நாளுக்கு முன்பாகவே நிகழும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என EAT- லான்செட் கமிஷனின் ஆய்வு கூறுகிறது. இந்த டயட்டினால் மாரடைப்பு, இதய நோய், கேன்சர் உள்ளிட்ட நோய்களின் அபாயமும் குறையுமாம்.

News October 8, 2025

₹1000 கோடி வசூலிக்குமா ‘காந்தாரா: சாப்டர் 1’

image

இதுவரை ₹400 கோடி வசூலை கடந்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ ₹1000 கோடி வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இப்படம், தீபாவளி வாரத்தை கடந்தும் வெற்றிகரமாக ஓட அதிக வாய்ப்புள்ளது. எனினும், இந்தி பெல்டில் இப்படம் ஈட்டும் வசூலை பொறுத்தே ₹1,000 கோடி சாத்தியமாகும் என்றும் அதிகபட்சமாக ₹700-₹800 கோடி வசூல் உறுதி எனவும் திரையுலகை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

News October 8, 2025

விஜய்யை கைது செய்வது தேவையற்றது: கே.எஸ்.அழகிரி

image

கரூர் துயரத்தில் மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்தால் அது மோசமான அரசியல் பின்விளைவை ஏற்படுத்தும் என்றும் கைது நடவடிக்கை தேவையற்றது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், விஜய்யை கைது செய்யும் நிலைக்கு CM ஸ்டாலின் செல்லமாட்டார் என்று கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.

error: Content is protected !!