News October 8, 2025

நாட்டு மக்களுக்கு நன்றி: PM மோடி

image

PM மோடி, தலைமைக்கு வந்து இன்று 25-வது ஆண்டு தொடங்குகிறது. 2001-ல் இதே நாளில் தான் குஜராத் CM ஆக பதவியேற்றார். இதுபற்றி X-ல் அவர், சக இந்தியர்களின் தொடர் ஆசிகளுக்கு நன்றி. அரசின் தலைமைப் பதவிக்கு வந்து 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் என்ற அவர், நாட்டின் முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலேயே இத்தனை ஆண்டுகள் பாடுபட்டு வருவதாக தெரிவித்து சில PHOTOS-ம் பதிவிட்டுள்ளார்.

Similar News

News October 8, 2025

கன்பூசியஸ் பொன்மொழிகள்

image

▶நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும். ▶உண்மையான அறிவு என்பது நமக்குத் தெரிந்ததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே!. ▶ஏழையின் செல்வம் அவனது திறமைதான். ▶எல்லாமே அழகுதான், ஆனால் எல்லோர் கண்களும் அதைக் காண்பதில்லை. ▶உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.

News October 8, 2025

விவசாயிகளை அலைக்கழிக்கும் திமுக அரசு: EPS

image

விவசாயிகளிடம் இருந்து உரிய காலத்தில் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு அலைக்கழிப்பதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். இடவசதியும், சாக்குகளும் இல்லாததால் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகவும், இதனால் நெல் மணிகளுடன் விவசாயிகள் பல நாள்களாக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதில் போர்க்கால நடவடிக்கை எடுத்து கொள்முதல் செய்வதுடன், விவசாயிகள் கணக்கில் பணத்தை விரைந்து செலுத்தமாறு வலியுறுத்தியுள்ளார்.

News October 8, 2025

மல்யுத்த சாம்பியன் அமன் ஷெராவத் இடைநீக்கம்

image

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்தை இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், 57 கிலோ எடைப்பிரிவில் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.7 கிலோ எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, அமன் ஷெராவத் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி மல்யுத்த சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

error: Content is protected !!