News April 15, 2024
ஷங்கர் மகள் திருமணத்தில் திரைப் பிரபலங்கள்

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.
Similar News
News November 12, 2025
சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை

கவுஹாத்தியில் நடந்த ஈஸ்டன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியில், தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் பட்டம் வென்று அசத்தியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் மகாராஷ்டிராவின் அஞ்சலி செம்வாலை எதிர்கொண்ட ஷமீனா, 11-9, 13-11, 9-11, 11-4 என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனார். இவருக்கு தமிழக அரசு சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
மாணவர்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? சீமான்

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025-ஐ தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டத்திருத்தத்தினால், கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தும் பட்சத்தில், ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் என்று X-ல் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஏழை எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா என்றும் சீமான் சாடியுள்ளார்.
News November 12, 2025
போஸ் தருவதில் எங்கள அடிச்சுக்க ஆளேயில்ல.. PHOTOS

பெரும்பாலும் புகைப்படங்களில் குறிப்பிட்ட சில விலங்குகள் மிகவும் அழகாக தோன்றும். அதற்கு காரணம், அவற்றின் வண்ணமயான நிறங்கள், முக வடிவமைப்பு என்பதையும் தாண்டி, பெரும்பாலும் அவை தரும் போஸ்கள் தான். அப்படி அருமையாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள கடல் விலங்குகளின் போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை கவர்ந்த விலங்கு எது?


